இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலைவர்களில் ஒருவரும் நீண்டகால மத்திய குழு உறுப்பினருமான தோழர் ஆனந்த தவுலகல, நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 13 அன்று தனது 77வது வயதில் காலமானார் என்பதை சோ.ச.க. ஆழ்ந்த கவலையுடன் அறிவிக்கின்றது.
உலகப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப பல தசாப்தங்களாகப் போராடிய இந்த துணிச்சலான ட்ரொட்ஸ்கிசத் தலைவருக்கு சோசலிச சமத்துவக் கட்சி அஞ்சலி செலுத்துகிறது.
அவரது இறுதிச் சடங்கு வியாழன் மாலை 6 மணிக்கு கண்டியில் உள்ள மஹாய்யாவ பொது மயானத்தில் நிறைவேறியது. அதற்கு முன்னதாக இடம்பெற்ற புகழஞ்சலி கூட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன உரையாற்றியதோடு, உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் கே. ரட்னாயக பிரதான உரையாற்றினார்
தோழர் தவுலகல பற்றிய இரங்கல் விவரணம் விரைவில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும்.