ஐ.நா பொதுச் சபை உரையில் ட்ரம்ப் உலகிற்கு எதிராக போர் பிரகடனம்
கடந்த செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் ஒரு பாசிச உரையை நிகழ்த்தினார். இந்த உரையில் "அமெரிக்கா முதலில்" என்பது உலகத்தை ஒழுங்கமைக்கும் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அவர் உலகெங்கிலும் போரையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொள்வதிற்கு அச்சுறுத்தியதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நிர்வாகத்தின் குற்றவியல் நடவடிக்கைகளையிட்டு பெருமை பீற்றிக்கொண்டார்.